இந்த காலத்து மனிதர்களிடம் எதனால் மனிதத்தன்மை குறைவாக இருக்கிறது , நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற சுயநலமான வாழ்க்கை முறை எந்த அளவுக்கு மற்றவர்களை பாதிக்கிறது என்பதை சொல்லும் ஒரு அருமையான படம்தான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ! இந்த படத்தில் எப்படியாவது யூட்யூப் சேனல்க்கு சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்டுவந்து வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று ஒரு சாலிட்டான லட்சியம் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களுடய வாழ்க்கையில் ஒரு ஸ்வரஸ்யமாக இருக்கும் திருப்பம் நடக்கிறது, ஒரு மிகப்பெரிய அரசியல் பிரமுகர் அவர்களுக்கு வெறும் மூன்று சவால்களை கொடுத்து அந்த சவால்களில் வெற்றி அடைந்துவிட்டால் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதாக சொல்லுகிறார். இப்போது இந்த இளைஞர்கள் சரியென்று தலையாட்டிவிட்டு சந்தோஷமாக கையெழுத்து போட்டு கொடுக்கும்போது அடுத்தடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் என்ன ? மூன்று சவால்களையும் அவர்களால் வெற்றி அடைய முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் ப்ரொடக்ஷன் வேல்யூ மீடியமாக இருந்தாலும் ஸ்கிரீன் ப்ரெசெண்ட்டேஷன் வேற லெவல். நம்ம தமிழ் சினிமாவில் எந்த ஒரு சின்ன பட்ஜெட் படமும் இந்த படத்தை ஒரு இன்ஸ்பிரேஷன்னாக எடுத்துக்கொள்ளலாம் மக்களுக்கு நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்றால் அந்த படம் சோகப்படமாக அல்லது சீரியஸான படமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும் ஒரு பெஸ்ட்டான காமெடி , ரொமான்ஸ் , எல்லாமே நிறைந்த கமர்ஷியல் படமாக இருந்தாலும் கூட போதும் என்று சொல்லும்படம் இந்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ! - இந்த படம் என்னுடைய பேர்ஸனல் பேவரட் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் !
RIO RAJ ❣️❣️❣️
பதிலளிநீக்கு