ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு பின்னால் ரொம்ப பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த நண்பேன்டா படம் கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மென்ட் என்றாலும் இந்த படம் டிஸப்பாயிண்ட்மென்ட் இல்லை , உதயநிதி , நயன்தாரா , சந்தானம் என்று பலரும் நடித்து இருக்கும் இந்த படம் ஒரு ஃபேமிலி வேல்யூவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல பொழுதுபோக்கு படமாக வெளிவந்தது. இந்த படம் வெளிவந்தபோது குறிப்பாக பேசப்பட்ட விஷயம் இந்த படத்தின் சவுண்ட் டிராக் ஆல்பம், இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட், இந்த படத்துடைய கதைக்கு வரலாம், பிரிந்து இருக்கும் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளை சால்வ் பண்ணி ஒரு பக்கம் குடும்பத்தை சேர்த்துவைக்க கதிர்வேலனும் அவருடைய நண்பர் மயில்வாகனனும் பண்ணும் திட்டங்கள் ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருக்க காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்த கதிர்வேலனுக்கு தன்னோடு எதிர்ப்பில் இருக்கும் குடும்பத்தில் வளர்ந்த பெண்ணாக இருக்கும் பவித்ராவின் நட்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறிவிடவும் கடைசியில் திருமணம் வரை சென்றதா என்பதுதான் படத்தின் கதை. ஒரு பாஸ்ஸபில் கமர்ஷியல் என்டர்டைன்மென்ட்தான் படத்தின் ஆம்பிஷன் என்பதால் படம் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக கடைசிவரைக்குமே சென்றுக்கொண்டு இருக்கிறது. காமிரா வொர்க் , ஸாங்க்ஸ், படத்தொகுப்பு , இயக்கம் மற்றும் தேர்ந்த நடிகர்களின் சப்போர்டிங் ஆக்டிங் என்று நிறைய பிளஸ் பாயிண்ட் இருப்பதால் பாக்ஸ் ஆபீஸ் வரவேற்பு இந்த படத்துக்கு கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த பாணியில் வெளிவந்த நிறைய படங்கள் கண்டிப்பாக பேஸிக்காக பொழுதுபோக்கு விஷயங்களை கொண்ட ஃபேமிலி படங்களுக்கு கண்டிப்பாக நல்ல சப்போர்ட்தான். இதுபோல ஸ்வாரஸ்யமான விமர்சனங்கள் படிக்க "மக்களின் அபிமான ஸ்தாபனம்" இந்த NICE TAMIL BLOG - கண்டிப்பாக எல்லா போஸ்ட்களையும் படியுங்கள். !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக