𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

CINEMA TALKS - ENNODU VILAIYADU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படத்தில் சம்மந்தம் இல்லாத வேறு வேறு கரணங்களுக்கு அலைந்துகொண்டு இருக்கும் இரண்டு கதாப்பாத்திரங்கள் சென்னையின் இரண்டு தனித்தனியான இடங்களில் இருக்கின்றனர், அவர்களுடைய வாழ்க்கையில் வேலை , குடும்பம் , காதல் என நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த இரண்டு பேரும்தான் அவர்களுடைய வாழ்க்கையின் ஹீரோக்கள் என்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் எப்படி இவர்களை சேர்ந்து போராட வைக்கிறது என்றுதான் படத்தின் கதை. சென்னையில் வேலை பார்க்க வந்த கதிர் அவருடைய காதலியின் நிறைய நாள் கனவான அவளுடைய குடும்பம் வாழ்ந்த சொந்த வீட்டை மீட்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார், இன்னொரு பக்கம் குதிரை பந்தயத்தில் அதிகமான தொகையை செலுத்தி இப்போது ஃபினான்ஷியல் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் பரத் கடைசியாக ஒரே ஒரு முறை பெரிய தொகையில் விளையாடி ஒரே பந்தயத்தில் அவருடைய வாழ்க்கையை மாற்ற நினைக்கிறார். இவர்களுடைய இருவரின் வாழ்க்கையும் நேர் எதிராக சந்திக்கும்போது இருவருடைய பிரச்சனைகளையும் சேர்ந்து ஃபேஸ் பண்ணும் கிளைமாக்ஸ்தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் கொஞ்சம் கிரியேட்டிவ்வாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்! இந்த மாதிரி திறமையான கலைஞர்களிடம் இருந்து படம் மொத்தமுமே பார்த்து ரசிக்கும் வகையில் நிறைய தமிழ் படங்கள் நம்முடைய தமிழ் சினிமாவில் வெளிவந்துகொண்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு மசாலா விஷயங்களை மட்டுமே கொடுக்கும் படங்களை விட இதுபோல வித்தியாசமாக கதைக்களம் கொண்டுவந்து உருவாக்கி வெளிவந்த படங்கள் கிடைப்பது அரிதானது.  கண்டிப்பாக இந்த மாதிரி தரமான படங்களுக்கு பேராதரவு கொடுத்தே ஆகவேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக