ஒரு மனிதனை அவருடைய இடத்தில் வாழும் மனிதர்கள் சுயநலத்துக்காக எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படம் பிரிவினை அரசியல் நடத்தினால் எந்த அளவுக்கு பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் அதே சமயத்தில் மனதுக்குள் பிரிவினை இருந்தாலும் நேரடியாக மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்ய முடிவு பண்ணினால் எப்படி மக்களுடைய வாழ்க்கை மாறுகிறது என்றும் சிறப்பாக சொல்லியிருக்கிறது. பிரிவினையால் பிரிந்து இருக்கும் ஒரு ஊரில் உள்ள இரு உயர்குடும்ப பிரிவுகளிலும் சமமான அளவு எண்ணிக்கையுள்ள வாக்குகள்தான் இருக்கிறது. இப்போதுதான் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார் புதிதாக அடையாள அட்டைகள் வாங்கிய நெல்சன் மண்டேலா. அவருடைய வாழ்க்கை மொத்தமுமே இந்த மக்களால் மரியாதையில்லாமல் நடத்தப்பட்ட அவருடைய வாக்கு கிடைத்தால்தான் இரண்டு கட்சிகளில் எதேனும் ஒரு கட்சி வெல்ல முடியும் என்பதால் ஆரம்பத்தில் மிக மிக அதிகமாக அவருக்கு மிரட்டல் கொடுக்கின்றனர். பின்னாட்களில் அவருக்கு நெருக்கமான ஒரு நண்பன் இந்த மோசமான சுயநலமிக்க மனிதர்களால் தாக்கப்பட்டதால் கோபப்பட்டு இவர்களை வைத்தே அந்த ஊருக்கு தேவைப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்துகாட்டுவதுதான் படத்தின் கதைக்களம். யோகி பாபு இந்த படத்தில் அவ்வளவு தெளிவான நடிப்பை கொடுத்து உள்ளார். நகைச்சுவையான யோகிபாபுவின் கலாய்ப்புகளை படத்தில் மிஸ் பண்ணினாலும் யோகிபாபு மிகச்சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக படத்தில் வெற்றியடைந்து காட்டுகிறார். இயக்குனர் அவர்கள் இந்த படத்தை பிரிவினைக்கு எதிரான நேரடியான கடினமான விமர்சனமாக முன்வைத்து எடுத்துள்ளார். நிறைய பாராட்டுக்களை பெறவேண்டிய ஒரு படைப்பு இந்த திரைப்படம். கண்டிப்பாக பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக