இன்னொவேஷன் நிறைந்து தொடங்கும் எந்த ஒரு ஸ்டார்ட் அப் விஷயமும் கடைசியில் காணாமல் போக காரணம் என்ன ? வணிக முயற்சிகளை பொறுத்த வரைக்கும் சரியான நிலைப்பாடு இல்லாமல் களத்தில் இறங்க கூடாது. நம்ம கதாநாயகர் வங்கியில் நண்பர் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு பின்னாட்களில் நண்பர் கடனை கட்டவில்லை என்றால் ரொம்ப சிரமத்தில் அடிபட்டு இருப்பார். காசு செலவு பண்ணலாம் ஆனால் சம்பாதிக்க முடியாது. இத்தனைக்கும் வணிகம் என்பது அதிக அளவு காசு பணம் சேர வேண்டிய ஒரு விஷயம். அடுத்த 3-4 வருடங்களுக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்று இப்போதே முடிவு பண்ணி எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எப்போதுமே PLAN 1 உடன் PLAN 2 மற்றும் PLAN 3 என்று மூன்று திட்டங்களை எடுத்து வையுங்கள். சந்தரப்பமும் சூழ்நிலையும் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம். கப்பல் ஏறும் முன்னால் எதிர்கால கடல் புயலுக்கும் சூறாவளிகளுக்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் செயல் அமைப்புகளையும் பண்ணிவைத்துவிட வேண்டும். கப்பலை நடுக்கடலுக்குள் செலுத்திக்கொண்டு இருக்கும்போது புயலை பார்த்து நடுங்கினால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நான் சமீபத்தில் பார்த்த நண்பர் சுமாராக ஐம்பது இலட்சம் ரூபாய் முதிர்வு தொகைக்கு ஆக்சிடென்ட்டல் டெத் இன்சூரன்ஸ் போடுவது பற்றிய யோசனையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.ஸியில்தான் போடப்போகிறார் அது வேறு விஷயம் (அரசியல் வேண்டாமே !) , இங்கே அவர் அடுத்த நொடிக்கு துணிந்து தயாராக இருக்கிறார். அவர் இல்லை என்றாலும் அவருடைய குடும்பத்துக்கு போதுமான பெரிய தொகை கிடைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் இந்த மாதிரி முடிவுகள்தான் ஒரு வணிக நிறுவனத்துக்குமே தேவையான ஒரு விஷயம் என்று சொல்லலாம். உங்களுடைய சரியான நிலைப்பாடு என்ன ? அடுத்து அடுத்து செய்ய வேண்டிய 100 செயல்களின் பட்டியல் என்ன ? எல்லாமே முன்கூட்டி திட்டமிட்டுதான் இறங்க வேண்டும். ஒரு தப்பான முடிவு கூட டைட்டனிக் கப்பலை கடலுக்குள் கவிழ்ந்து போக வைத்தது போல நிறுவனத்தை கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கடித்துவிடும். இதனால்தான் வணிக முயற்சி செய்து தொழில் ஆரம்பித்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப பின்னணியில் வொர்க் பண்ணி செய்ய வேண்டிய விஷயம். ஒரு கம்பெனி நடத்துவது குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டு போல இருக்காது. உண்மையில் ரொம்ப அதிகமாகவே கஷ்டப்பட வேண்டும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக