காமெடி சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் புதிதாக ஒரு கான்செப்ட் இந்த படம். ஒரு ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் விரல் நுனியில் உலகத்தை தரைமட்டம் ஆக்கும் அளவுக்கு உலகத்தின் எல்லா கம்ப்யூட்டர்களையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு கவனமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது CAROL என்ற ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. CAROL ஒரு சராசரி பெண். யாஹூ நிறுவனத்தில் வேலையை விட்டு வெளியே வந்து இப்போது வேலையில்லாமல் சமூக சேவைகள் செய்துகொண்டே வேலை தேடிக்கொண்டு இருக்கும் பெண்ணை காண்டாக்ட் பண்ணிவிட்டு இந்த உலகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் CAROL அவளை விட்டு பிரிந்து போன GEORGE-ஜிடம் மறுபடியும் பேசி பழகி காதலித்தால் மட்டும்தான் இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வரும் என்றும் இந்த உலகத்தை அழிக்க மாட்டேன் என்றும் அந்த ஆர்ட்டிஃப்பிஷியல் இண்டெலிஜன்ஸ் அவளை சேலஞ்ச் பண்ணுகிறது. மறுபடியும் காதலிக்க முயற்சி பண்ணும் CAROL இப்போது GEORGE ஐ இம்ப்ரஸ் பண்ண பண்ணும் முயற்சிகளும் சொதப்பல்களும் என்று ஒரு நல்ல ரசிக்கும்படியான ரொமான்டிக் காமெடி. இந்த படத்தில் ஒரு அளவுக்கு நல்ல கிரியேடிவிட்டி மற்றும் திறமையான எக்ஸ்ஸிக்யூஷன் இருக்கிறது. இதுதான் இந்த படத்தை ரொம்ப சிறப்பாக காட்டுகிறது. இமாஜின் பன்னிக்கங்களேன் ஒரு சீரியஸ்ஸான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை சம்மந்தமே இல்லாமல் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி கதையுடன் மிஸ் பண்ணினால் எப்படி இருக்கும் ? அதேதான் இந்த படம் ! மெலிசா மெக்கார்த்தி ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஆக்ட்ரஸ். அவங்க காமெடி ரொம்ப நேச்சுரல்லாக இருக்கும். இந்த படத்தில் அவங்க மேஜிக் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக