𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 20 நவம்பர், 2023

CINEMA TALKS - SARDHAR - 2023 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

நிறைய படங்கள் நம்ம சமுதாயத்தில் நடக்கும் நிறைய பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமே இல்லாமல் தட்டிக்கேட்கவும் செய்கிறது, அந்த வகையில் இந்த படம் இயக்குனர் பி. எஸ். மித்ரன் கொடுத்துள்ள ஒரு அருமையான திரைப்படம். இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் டெக்னோ கான்செப்ட் ரொம்ப நன்றாகவே சொல்லப்பட்டு இருக்கும் ஆனால் இந்த படம் ஒரு ஸ்பை பிலிம் என்பதால் நிறைய கான்ஸேப்ட்கள் துல்லியமாக ரெஃபரென்ஸ் எடுக்கப்பட்டது ஒரு 1980 ஸ்ல இந்திய பாதுகாப்பு துறையில் உளவு மற்றும் தகவல் சேகரிப்பில் எவ்வளவு அட்வாண்டேஜ் இருந்ததோ அவ்வளவு விஷயங்களையும் கொண்டு ஒரு பிளாஷ்பேக்ல சந்திர போஸ் அவர்களின் கேரக்டர் டிசைன் இன்னொரு பக்கம் அவருடைய அப்பாவுக்கு மக்கள் வெறுப்பு இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளத்தை மாற்ற போராடும் பையன் என்று இரண்டு கேரக்டர்ஸ் எடுத்தாலும் கார்த்தி வேற லெவல்லில் நடித்து கொடுத்துள்ளார். இயக்குனர் பி. எஸ். மித்ரன் படங்களில் மட்டும்தான் மிகைப்படுத்தப்படாத டெக்னிகல்லாக வொர்க் அவுட் ஆகும் கான்செப்ட்கள் இருக்கும். டெக்னிகல்லாக ஸ்ட்ராங்க்காக இந்த படத்தின் கதை இருப்பதால் புது ஜெனெரேஷன் இளைஞர்களுக்கு ரொம்ப ரசிக்கும்படியான ஒரு ஆக்ஷன் படமாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் ரொம்ப இன்ஸ்பைர் பண்ணும் ஸ்டோரியாக இருக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் நடக்கும் காட்சிகள் கண்டிப்பாக டார்க் நைட் படத்தின் சாயல் கிடையாது. இது நிச்சயமாக ஒரு மனிதர் அவருடைய நாட்டின் மேல் எவ்வளவு அன்பு வைத்து உள்ளார் என்பதற்கான சான்று என்று சொல்லலாம். படம் மொத்தமும் பிரச்சனைகளை ஃபேஸ் பண்ண தைரியமாக எதிர்த்து போராடவேண்டிய முக்கியத்துவம் இருக்கிறது. கமர்ஷியல் படங்களை பொல உள்ளங்கை பட்டாலே வில்லன்கள் பறந்துவிடுவார்கள் என்ற கான்செப்ட்களை எல்லாம் முடிந்தவரையில் தவிர்த்துவிட்டு ஒரு சாலிட்டான கதையை நம்ம தமிழ் நாடு ஆடியன்ஸ்க்கு எப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று யோசித்து பெஸ்ட்டாக கொடுக்கப்பட்ட படம் என்றுதான் இந்த படத்தை சொல்ல முடியும். குறைந்தபட்சம் குடிக்கும் தண்ணீரை கூட விட்டுவைக்காமல் கார்ப்பரேட் பண்ணும் ஆதிக்கங்கள் இந்த படத்தில் காட்டப்பட்டு இருப்பதால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். நிறைய அடிப்படையான பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து ஒரு வெற்றிப்படம் கொடுத்துள்ள பி எஸ் மித்ரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக