பிரியமுடன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஒரு படம். நம்ம தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சூப்பர்ரான படமா என்று யோசிக்க வைத்த ஒரு படம். நெகட்டிவ் ஆன கேரக்டர் இருந்தாலும் யாரையுமே காயப்படுத்த நினைக்காத ஒரு கோபக்கார பணக்கார பையனாக இருக்கும் ஒரு இளைஞர்தான் வசந்த் , தனக்கு ஆசைப்பட்ட விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லை வரைக்குமே சென்று சண்டைபோட்டு வாங்கக்கூடிய ஒரு மனநிலையில் எப்போதும் இருப்பவர். வெளி மாநிலம் செல்லும்போது அங்கே பார்த்த பிரியா என்ற பெண்ணை அதன் பின்னால் நிறைய இடங்களில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவே இல்லை. கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது நேரில் பார்த்தபொது இவருடைய நண்பர் வசந்தாகுமார் பண்ணிய உதவியை தான் பண்ணியதாக சொல்லி நண்பராக மாறிவிடுகிறார் , இந்த சந்திப்பு காதல் வரைக்கும் சென்ற பின்னாலும் உண்மையை சொன்னால் பிரிந்துவிடுவாள் என்ற காரணத்தால் சொல்லாமல் மறைக்கும் வசந்த் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்று விறுவிறுப்பான கதையை படத்தில் நீங்கள் பார்க்கலாம். விஜய் இந்த படத்தில் எப்போதுமே விட்டுக்கொடுக்காத ஒரு நெகட்டிவ் கேரக்டர்ராக பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்டாக பண்ணி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் ஆல்டர்னேட் கிளைமாக்ஸ் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு பின்னால் வெளியிடப்படும்போது மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் வெளியிடப்படவில்லை. ஒரு நெகட்டிவ் கேரக்டர்ரில் நடிக்கும் கோபக்காரராக இருக்கும் வசந்த் கதாப்பத்திரம் என்னதான் எப்போதுமே கோபமாகவே இருந்தாலும் ஆடியன்ஸ் ஃபேவரட்டாக மாறுவதுதான் இந்த படத்தின் தனியான சிறப்பு. மொத்ததில் ரொம்ப புதுமையான கதையை சொல்லி இருக்கும் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த பிரியமுடன் ! என்ற திரைப்படம். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த படத்தில் தேவா அவர்களின் பின்னணி இசையும் பாடல்களும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் கேட்க கேட்க சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம், மேலும் இன்னொரு பிளஸ் பாயிண்ட் கண்களால் கைது செய் மாதிரியான படங்களிலும் இதே போல நெகட்டிவ் பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து கதையை சொன்னாலும் இந்த படத்தின் எக்ஸிக்யூஷன் ஸ்டான்ட்டர்ட்ஸ்ஸை அந்த படத்தால் தோற்கடிக்க முடியவில்லை. இதனாலும் இந்த படம் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக