நம்ம சினிமாவில் இவ்வளவு டீடெயில்லான ஒரு கமர்சியல் படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிறது. இந்த படத்துடைய கதை , ஹிமாச்சல் பிரதேஷ் மாகாணத்தில் ஒரு சாதாரண காப்பி ஷாப் உரிமையாளராகவும் அங்கே வனவிலங்கு பாதுகாப்பு துறையில் முக்கியமான பொறுப்புகளிலும் இருக்கும் பார்த்திபன் அவருடைய குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் ஒரு பெரிய க்ரைம் ஃபேமிலி இவரை அந்த குடும்பத்தை சேர்ந்த லியோ தாஸ் என்று துரத்துகிறது. நிறைய பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் பார்த்திபன்/ லியோ தாஸ் எப்படி இந்த பிரச்சனைகளை ஜெயிக்கிறார் என்று இந்த படத்தின் கதைக்களம். விஜய்க்கு இந்த படம் ரொம்பவுமே பெஸ்ட்டான சான்ஸ்ஸாக இருக்கிறது. பொதுவாகவே விஜய்க்கு என்று ஒரு தனி ஸ்டைல் , மேனரிஸம் மற்றும் டையலாக்ஸ் என்று மற்ற படங்களில் இருந்து விஜய் படங்களை தனித்து வெற்றியடைய வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. இந்த படம் மொத்தமும் இன்டர்நேஷனல் லெவல் காமிரா வொர்க் மற்றும் ப்ரொடக்ஷன் வேல்யூ இருப்பதால் கொடுக்கப்பட்ட கதைக்கு விஜய் மற்றும் திரிஷா கொடுத்துள்ள பெர்ஃபார்மன்ஸ் உண்மையில் வேற லெவல். விக்ரம் படத்தில் இருப்பது போலவே இந்த படத்திலும் படத்துக்கே தேவை இல்லாத காட்சிகள் தேவை இல்லாத ஸாங்க்ஸ் என்று எதுவுமே இல்லை. என்னதான் படம் கமர்ஷியல் படமாக எடுக்கபட்டாலும் படத்தின் ஒரு ஒரு ஸீன்னும் படத்துக்கு தேவை என்பதால் மட்டும்தான் படத்தில் இருக்கிறது. அதுக்காக இந்த படம் ஆக்ஷன் மட்டும்தான் ஃபோகஸ் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் ரொம்ப எமோஷனல்லாகவும் இந்த படம் நன்றாக மேட்ச் ஆகிறது. கமர்ஷியல் படங்களுக்கு உரிய அவுட் ஆஃப் லாஜீக்ல வெற்றி அடையும் மேஜிக் இந்த படத்தில் தெளிவாக வெற்றி அடைந்துள்ளது என்பதற்கு நல்ல திரைக்கதை இந்த படத்தில் இருப்பது ஒரு சாட்சி. இந்த படம் லொகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படம் என்பதால் கதை மற்ற படங்களின் சம்பவங்களோடு ஒரு அளவுக்கு இணைந்தே உள்ளது. சஞ்சய் டட் . அர்ஜூன் , மரியம் , கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் என்று பலர் நடித்துள்ள இந்த படம் விஷுவல்லாக ரொம்பவுமே இம்ப்ரேஸ்ஸிவ்வான லொகேஷன்ஸ் மற்றும் ஸ்டண்ட்ஸ் கொடுத்து கதை ரொம்ப சிம்பிள்ளாக இருந்தாலும் ஆக்ஷன் அட்வென்சர் ரொம்ப ரொம்ப பெஸ்ட்டாக இருக்கும் அளவுக்கு கிளைமாக்ஸ் வரைக்கும் கொண்டுவந்துள்ளது. லொகேஷன்ஸ் பற்றி பேசும்போது விஷுவல் எஃபக்ட்ஸ் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விஷுவல்ஸ் அவ்வளவு துல்லியமாக உள்ளது ஒரு ஒரு சின்ன சின்ன டீடெயில்லும் ஃபைட் ஸீன்களில் பார்க்க முடியும். லொகேஷ்ஷின் ஐகானிக் நைட் டைம் ஃபைட் ஸீன்ஸ்ல இந்த காப்பி ஷாப் ஃபைட் ஸீன் பாசிபிள்லி கடந்த 5 வருடத்தில் வெளிவந்த எல்லா படங்களின் ஃபைட் ஸீன்களை விடவும் மிஞ்சிய ஒரு விஷயம். குறிப்பாக நாஸ்டால்ஜிக் டச்சாக 'தாமரை பூவுக்கும்' பாடல் பேக்ரவுண்ட்ல போகும்போது இங்கே விஜய் ஒருவராக அத்தனை ரௌடிகளையும் அடித்து நொறுக்கிக்கொண்டு இருப்பார் அது எனக்கு பெர்சனல்லாக ரொம்ப பிடித்த விஷயம். நான் முன்னதாக சொன்னது போல ரொம்ப சிம்பிள்ளான ஸ்டோரிதான் ஆனால் ரொம்ப நல்ல எக்ஸ்ஸிக்யூஷன் மற்றும் போன படமான விக்ரம் படம் லெவல்க்கு ரொம்ப சினிமாட்டிக் ஸ்டாண்டர்ட்ஸ்ல எடுக்கப்பட்ட ஒரு தரமான படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக