இந்த படம் நான் முதல் முறை பார்க்கும்போது ரொம்ப ஹானெஸ்ட்டாக சொல்லவேண்டும் என்றால் கன்ஃப்யூஷன்தான். தண்டனைக்காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் நம்ம ஹீரோ டில்லி. அவருடைய ஆசை எல்லாமே அவருடைய மகள் அமுதாவை ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து அழைத்து சென்று பின்னாட்களில் ஒரு நல்ல அப்பாவாக மகளுடன் ஒரு அமைதியான குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் இன்ஸ்பெக்டர் பிஜாய் இப்போது IG யின் ரிடயர்மென்ட் பார்ட்டியில் நடந்த சதியின் காரணமாக விஷம் கலந்த ட்ரிங்க்ஸ்ஸால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபிஸர்ஸ்களை காப்பாற்ற வேண்டும். அவருக்கு இருந்த ஒரே ஆப்ஷன் டில்லியிடம் உதவி கேட்பதுதான். பக்கத்தில் மருத்துவ வசதி இருக்கும் இடத்துக்கு அனைவரையும் கொண்டுபோக அங்கே நிறுத்தப்பட்ட கேட்டரிங் காண்ட்ராக்ட்ட்ர் லாரிதான் ஒரே வழி. பிஜாய்க்கு கையில் அடிபட்டு உடைந்துபோய்யிருப்பதால் அவரால் லாரியை ஒட்டவும் முடியாது. அதே சமயம் அங்கே காவல் துறையினரை தாக்க ஒரு கொலைகார கும்பல் இன்னொரு பக்கம் காவல் நிலையத்தை உடைத்தாவது கைப்பற்றப்பட்ட 900 கிலோ போதைப்பொருளை (பின்னால் விக்ரம் படத்தில் இந்த கண்டெய்னர் போதைப்பொருள் தயாரிப்பின் மூலப்பொருள் என்று சொல்லப்பட்டது) கைப்பற்ற யாரை வேண்டுமென்றாலும் கொல்லத்துணிந்த கொலைகார கும்பல் ஆனால் இவர்களை தடுக்க கான்ஸ்டபிள் நெப்போலியன் மற்றும் ஒரு சில கல்லூரி மாணவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக கதை நகர்கிறது. பாடல்கள் இல்லை என்பது ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். கதை நேரக்கொட்டில் நகர்கிறது. இதுவும் இன்னொரு பிளஸ் பாயிண்ட். கிளைமாக்ஸ்ல M-134 ஸீன் வேற லெவல். பொதுவாக பட்ஜெட் படம்மாக இருந்தாலும் காமிரா வொர்க் சினிமாடோகிராபி வேற லெவல். நைட் விஷன்ல சினிமா ஷூட் பண்ணி எடிட் பண்ணுவது எவ்வளவு கஷ்டமானது என்று எடிட்டிங்ல இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் ஆனால் படம் மொத்தமும் நைட் காட்சிகள் இருந்தாலும் விஷுவல்லில் நல்ல பிரிமியம் ஃபீலிங்க் இருந்தது. கிளைமாக்ஸ்ல OPEN ஆன ENDING என்று அன்னைக்கு நான் ஆச்சரியப்பட்ட காலத்தில் எல்லாம் இந்த படத்துக்கு அடுத்த பாகம் வரப்போகிறது என்றுதான் யோசித்தேனே தவிர்த்து சினிமாட்டிக் யுனிவெர்ஸ் பற்றி கொஞ்சம் கூட கெஸ் பண்ணவில்லை. லோகேஷ் கனகராஜ் வேற லெவல். இந்த படம் ஒரே நேரக்கோடு. படத்துக்கு தேவையற்ற விஷயம் என்று எதுவுமே இல்லை. மேலும் இந்த படம் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக வெளிவந்த நாட்களில் பட்ஜெட் கொஞ்சமாக இருந்தாலும் சாதித்து காட்டியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக