நீங்கள் நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி படம் பார்த்து இருக்கிறீர்களா அந்த படத்துக்கு வெளிவந்த நாட்களில் நிறைய வரவேற்பு கிடைத்தது , பணத்தை ஆஃப்லைன்னில் கொள்ளையடித்து பெரிய ஆளாக இருக்கும் வில்லனிடம் நல்லது பண்ண நினைத்து தோற்றுப்போனதால் பணத்தை எல்லாம் இழந்த ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியர் நேருக்கு நேராக மோதி ரிவேன்ஜ் எடுக்கும் ஒரு படமாக அந்த படம் இருக்கும் ஆனால் அந்த படத்துக்கு நேர் ஆப்போஸிட்டாக இருக்கும் ஒரு படம் வேண்டும் என்றால் அதுதான் இரும்புத்திரை. இந்த படத்துடைய டிரெய்லர் யூ ட்யூப்ல வந்தபோது 10 தடவைக்கு மேலே திரும்ப திரும்ப பார்த்து நான் என்னுடைய வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துவிட்டேன் அந்த அளவுக்கு ரொம்ப இண்டென்ஸ்ஸான ஒரு கதை. கதிரவன் நிறைய விஷயங்களில் ரொம்பவுமே கோபப்படுபவர். இவருடைய கோபத்துக்கு காரணம் சின்ன வயதில் கடன் தொல்லைகள் இருக்கும் குடும்பத்தில் வளர்க்கப்பட்டதுதான் என்பதால் மன நல ஆலோசகராக இருக்கும் ரதியின் ஆலோசனையால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசி சமாதானம் பண்ணி தங்கையின் கல்யாணத்துக்கு லோன் கேட்டு அலையும்போது நேரடி சான்றிதழ்களால் கடன் வாங்க முடியாததால் ஒரு ஏஜெண்டு மூலமாக ரூபாய் 6 லட்சம் கடன் தொகையை வங்கிகணக்கில் கடனாக பெறுகிறார் ஆனால் அந்த பணம் உடனடியாக கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையின் பின்னணியில் இருப்பவர் வங்கி கணக்குகளில் இருந்து கொள்ளை அடிப்பதில் பல வருடங்களாக இணையதளத்தின் மறைக்கப்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் ஹாக்கர்ஸ் அமைப்பின் தலைவராக உள்ள சத்யமூர்த்தி என்று தெரிந்ததும் இந்த படம் ஒரு நேருக்கு நேர் மோதலாக கிளைமாக்ஸ் வரைக்கும் செல்கிறது. பி. எஸ். மித்ரன் ரொம்ப அருமையாக டெக்னிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து டிஜிட்டல் உலகம் தாக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று தெளிவாக சொல்லியுள்ளார். சமீபத்தில் ஒரு படத்துக்கு நேர்த்தியான சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி எக்ஸப்ளைன்னேஷன் ரொம்ப அவசியமானது. அந்த வகையில் சும்மா ஒரு வரி என்று எழுதாமல் முறையாக பேக்ரவுண்ட் ரிசர்ச் பண்ணி போதுமான தகவல்களை சேர்த்து இருப்பதால் படம் பிரமாதமான படமாக இருக்கிறது. விஷால் நேருக்கு நேராக அர்ஜூன்னை எதிர்க்கும் காட்சிகளில் அர்ஜூன் நிறைய நாட்களுக்கு பிறகு நேகட்டிவ் ரோல்லில் பிரகசிக்கிறார். பிளாஷ் பேக் ஸ்டோரி என்று எதுவுமே இல்லாமல் என்னால் இந்த விஷயத்தை செய்ய முடியும் அதனால்தான் செய்கிறேன் என்று சொல்லும் வசனம் ரொம்ப பெஸ்ட். ஒரு ஒரு காட்சியிலும் சினிமாட்டோகிராபி படத்துடைய வேகத்துக்கு ஏற்றது போல ரொம்ப தெளிவாக நகர்கிறது. டெக்னாலஜி காட்சிகளில் விஷுவல் எஃபக்ட்ஸ் ரொம்ப நேர்த்தியாக உள்ளது. சமந்தா , டெல்லி கணேஷ் கொஞ்சம் நேரமே வந்தாலும் படத்துக்கு ரொம்ப நல்ல கேரக்டர் கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு தேவைப்படும் படங்கள் இந்த மாதிரியான படங்கள்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக