𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வெள்ளி, 24 நவம்பர், 2023

CINEMA TALKS - BLEACH - 2018 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு ரொம்ப பெரிய ஜப்பானிய அனிமேஷன் தொடரின் பிலிம் அடாப்ஷன்தான் இந்த BLEACH படம். நம்ம கதாநாயகன்னுக்கு சின்ன வயதில் இருந்து அமானுஷயமான ஆவிகளை எல்லாம் கண்களால் பார்க்கும் சக்திகளை உடையவராக இருப்பதால் அவருடைய வாழ்க்கை மற்றவர்களை விடவும் வேறுபட்டுதான் இருக்கிறது. ஒரு நாள் புதிதாக அறிமுகமான தோழியை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தால் இறந்து போனவர்களை ஆன்மாக்ககளை கொடிய அரக்க உயிரினங்களிடம் இருந்து காப்பாற்றும் உயர்வான பொறுப்பை உடைய சக்திகளை ஒரு ஜப்பான்னிய மான்ஸ்ட்டரை தோற்கடிக்க சண்டை பொதும்போது ஏற்றுக்கொள்கிறார். இந்த சக்திகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டதால் இயல்பு வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்ன ? எதிரிகளின் போட்டிகளை கடந்து எப்படி மேலே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு பட்ஜெட் படமாக இருந்தாலும் சோர்ஸ் மெடீரியல்லில் இருந்து அவ்வளவு துல்லியமாக ஒரு தெளிவான கதையை படமாக எடுத்து இருக்கிறார்கள். இங்கே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருந்தது. நடிப்பு மற்றும் லொகேஷன்ஸ் ரொம்பவுமே பிரமாதம். பெரிய பட்ஜெட் ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களுக்கு நிகரான அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் வரும்போது எல்லாமே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஃபேன் ஃபிக்ஷன் போல இருந்தாலும் இவ்வளவு டேடிகேஷன் கொடுத்து நடித்து கொடுத்து இருப்பது ரொம்ப மோட்டிவேஷன் மற்றும் இன்ஸ்பைரேஷன்னாக இருக்கிறது. ஒரு தரமான ஜப்பான்னிய லைவ் ஆக்ஷன் அடாப்ஷன். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். ஒரு நல்ல படம். சப்போர்ட் பண்ண வேண்டிய படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக