𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 27 நவம்பர், 2023

CINEMA TALKS - BETWEEN TWO FERNS - THE MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


நான் இந்த மாதிரி ஒரு நகைச்சுவையான திரைப்படம் பார்த்ததே இல்லை. இந்த படம் ஜேக் காலிபியானாக்கிஸ் பொதுவாகவே டார்க் ஹியூமர் என்றால் வேற லெவல்லில் பண்ணுவாரு. இது அவருடைய சொந்தமான காமெடி ஷோ என்பதால் நிறைய நடிப்பு மற்றும் இசைத்துறை செலிப்ரேட்டிகளை நன்றாக கலாய்த்து வைத்து இருக்கிறார். பிட்வீன் டூ ஃபேர்ன்ஸ் என்பது ஒரு ரியாலிட்டி இன்டர்வியூ ஷோ. இந்த ஷோவில் வரும் கெஸ்ட்களை ஆன் ஸ்கிரீன்னில் சரியாக வைத்து கலாய்த்துக்கொண்டு இருப்பார் நம்ம ஜேக் காலிபியானாக்கிஸ் இதேபோல ஒரு முறை மேத்தியூ மெக்கானுவேவை கலாய்த்துக்கொண்டு இருக்கும்போது ஸ்டுடியோவுக்குள் தண்ணீர் கொட்டியதால் இன்டர்வியூவுக்குள் இருந்த இந்த இரண்டு பேரும் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிடுகின்றனர். டெலிவிஷன் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் இப்போது ஜேக்குக்கு வெறும் பத்தே நாட்களில் அமெரிக்கா முழுவதும் பயணம் பண்ணி எப்படியாவது கட்டாயப்படுத்தி 10 மீடியா நட்சத்திரங்களின் இன்டர்வியூக்களை எடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள் . இந்த பத்து நாளும் இவரும் இவருடைய குழுவில் இருப்பவர்களும் பண்ணும் கலகலப்பான காமெடி கலாட்டாக்கள்தான் இந்த பிட்வீன் டூ ஃபேர்ன்ஸ் திரைப்படம். செம்ம காமெடியாக இருக்கும். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக