𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 6 நவம்பர், 2023

CINEMA TALKS - ALL IN ALL AZHAGU RAJA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 இந்த மொத்த படமுமே நிறைய கலகலப்பான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஒரு நல்ல திரைப்படம். ஃபேமிலியோடு பார்த்தால் கண்டிப்பாக ஒரு ஃபெஸ்டிவல் போல மனது விட்டு சந்தோஷமாக ஸ்பெண்ட் பண்ணலாம். இது ஒரு காதல் கதைதான். ராஜா அவருடைய கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் போதுமான வருமானம் இல்லை என்றாலும் எப்படியோ நிறுவனத்தை நகர்த்திக்கொண்டு இருக்கிறார். இப்போது அவருடைய வாழ்க்கையில் காதலாக வருபவர்தான் நம்ம சித்ரா தேவிபிரியா , ஒரு சிறப்பான பாடகி ஆகவேண்டும் என்று மேனேஜர் வைத்து மியூஸிக் புரோகிராம்கள் நடத்தி ரொம்ப பயங்கரமாக பாடி ஆடியன்ஸை இசையின் பள்ளத்தாக்கில் தள்ளிவிடுகிறார். பிரியா பாட்டு பாடினால் நன்றாக இல்லை என்று ராஜா எவ்வளவோ சொன்னாலும் பிரியா கேட்கவே இல்லை. இதனால் காதலில் வெற்றியடைய ராஜா போடும் பிளான்கள் முதல் சந்தானம் குடும்பத்தின் பிளாஷ் பேக் வரைக்கும் ஒரு ஃப்யூச்சர் லெந்த் காமெடி படம். காதலா காதலா ! ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை கொஞ்சம் இன்ஸ்பிரேஷன் பண்ணி ரொம்ப கிளாஸ்ஸிக் ஸ்டைல்ல ப்ரெசெண்ட் பண்ணுண இந்த படம் ரொம்பவுமே ரசிக்கும்படியாக இருந்தது. தேவையான அளவுக்கு ப்ரொடக்ஷன் வேல்யூ , கார்த்திக் , காஜல் அகர்வால் , சந்தனம் , எம்எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பிரபு , ராதிகா ஆப்டே இன்னும் நிறைய திறமையான நடிகர்களின் பட்டாளமே இந்த படத்தில் இருப்பதால் இந்த படம் ரொம்ப ரொம்ப பெஸ்ட் இன் கிளாஸ் ஆக இருந்தது. இந்த படத்தில் கொடுக்கப்பட்ட டேடிகேஷன் ரொம்ப ரொம்ப அதிகம். வெளிவந்த காலத்தில் 2013 ல பாக்ஸ் ஆபீஸ்ஸை ஒரு அளவுக்கு பெஸ்ட்டாக பண்ணி கொடுத்தலும் இன்னைக்கும் தொலைக்காட்சியில் போடும்போது மிஸ் பண்ணாமல் பார்க்கக்கூடிய ஒரு கிளாசிக்காக இருக்கும் அன்டர் ரேட்டட் காமெடி பிலிம் இந்த படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக