𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 22 நவம்பர், 2023

CINEMA TALKS - AARAMBAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


பில்லா படத்துக்கு அப்பறம் இந்த படம் வெளிவரப்போகிறது என்றபோது ரொம்ப நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. சொல்லப்போனால் அப்போது எல்லாம்  வெறும் 2 G ஃபோன்கள் மட்டுமேதான் இருக்கும் என்பதால் இந்த படத்தின் TRAILER - ஐ பார்க்கவே புளூடூத் மூலமாக ஒரு ஃபோன்னில் இருந்து இன்னொரு ஃபோனக்கு அனுப்பி வைத்த நாட்கள் எல்லாமே இருக்கிறது. பில்லா - 2 படம் அவ்வளவு  கொடுக்கவில்லை. ஆனால் ஆரம்பம் படம் ஆடியன்ஸ்க்கு என்ன வேண்டுமோ அப்படி ஒரு ஸ்டைல் நிறைந்த ரொம்ப கிராண்ட் ஆன ஒரு ப்ரொடக்ஷன் நிறைந்த ஸ்பை - ஆக்ஷன் படமாக இருந்தது. பொதுவான கதை அரசியல் கொள்ளை காரணமாக தரமற்ற பொருட்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டதால் வெடிகுண்டு செயலிழப்பு சம்பவத்தில் அஜீத் அவருக்கு நெருக்கமான நண்பரை இழக்கிறார் ஆனால் தரமற்ற பாதுகாப்பு கவசம் அங்கே கொடுக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து பிரச்சனையை மேலே கொண்டு செல்லும்போது அனைத்து தவறான அதிகாரிகளும் அவருக்கு எதிராக செயல்பட்டு அவரை கொல்ல செயல்பட்டதால் அப்போது உயிரோடு வெளிவந்து பின்னால் நிறைய வருடங்களுக்கு பிறகு அவர்களை பழிவாங்க நேருக்கு நேராக மோதுவதுதான் ஆரம்பம் என்ற இந்த படம்.  நயன்தாரா , ஆர்யா , டாப்ஸி பன்னு மற்றும் கிஷோர் என்று திறமையான சப்போர்டிங் ஆக்டர்ஸ் இருந்ததால் பில்லா படத்தில் இருந்த அதே அளவுக்கு இந்த படம் அவ்வளவு இண்டரெஸ்ட்டிங்காக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் தமிழ் படங்கள் இருப்பது ரொம்ப கஷ்டம்தான் ஆனால் ஆரம்பம் படம் அந்த அளவுக்கு இருந்தது. நேர்த்தியான கதையில் கமர்ஷியல்லாக நம்ம ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அந்த எல்லா விஷயமும் இந்த படத்தில் இருக்கும். விஷ்ணுவர்தன் இன்னொரு பெரிய பிளாக்பஸ்டர் படத்தை ரொம்ப சரியான நேரத்தில் கொடுத்து இருந்தார். தமிழ் சினிமாவில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறந்த படங்களில் இதுவும் ஒரு படம் என்றால் கண்டிப்பாக மிகைப்படுத்தி சொன்னதாக இருக்காது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக