𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

வியாழன், 30 நவம்பர், 2023

GENERAL TALKS - பொறுமையே பெருமை - #PATIENCE MAKES A TASK PERFECT

 இன்னைக்கு இருக்கும் ஜெனரேஷனிடம் முக்கியமாக விட்டுப்போவது பொறுமை , ஒரு விஷயத்தை பண்ணணும்னா அங்கே பொறுமை ரொம்ப முக்கியம் , இதுவே அவசரமாக பண்ணினால் அந்த விஷயத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கடைசி வரைக்கும் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிடுவோம். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் , அது எல்லாமே உங்களால் செய்ய முடிந்தால்தான் அது வாழ்க்கை , இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. பொதுவாக இந்த ஜெனரேஷன் ரொம்ப போட்டி மனப்பான்மை நிறைந்தது. வேகமாக வேலைகளை செய்யாமல் நிதானமான முறையில் செய்தால் வாழ்க்கை ரொம்ப கடினமாக மாறிவிடும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் சுயநலம் பிடித்த அதிகாரிகள் அவர்களுக்கு வேலை பார்க்கும் பணியாளர்களை எல்லாம் கடைசி வரைக்குமே எதுவுமே தெரியாதவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் அந்த பணியாளர்கள் எதுவுமே கற்றுக்கொள்ள கூடாது என்பதிலும் ரொம்ப கவனமாக இருப்பார்கள். தனக்கு கீழே வலை பார்ப்பவர்கள் தன்னை விடவும் பெரிய பொசிஷன்னில் இருக்க கூடாது என்பதை கவனமாக வைத்து இருப்பார்கள். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ் அவர்களின் வெபினார் பார்க்கும்போது வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கடைசி வரைக்கும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றும் எப்போதுமே யார் மேலும் கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இருந்தால்தான் ஒரு சேர கம்பெனியை மேலே கொண்டுபோக முடியும் என்றும் சொல்லப்பட்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதனால்தான் பொறுமையாக யோசித்து வேலை செய்யுங்கள் , இப்படி வேலை பார்ப்பதன் மூலமாக அவசர அவசரமாக வேலை பார்க்கும்பொது நடக்கும் சொதப்பல்களையும் தடுமாற்றங்களையும் நன்றாகவே தடுக்கலாம்.  

1 கருத்து: