எஜுகேஷன் நமக்கு முக்கியமா ? - இப்போ இந்த கேள்வியை கேட்கும்போது நான் முக்கியம் இல்லை என்று பதில் சொல்லணும் அதுதானே உங்கள் விருப்பம் , சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். விஷயம் அந்த படத்தில்தான் இருக்கிறது. இந்த காலத்தில் எஜுகேஷன் ரொம்பவுமே பிரஷர்ராக இருக்க காரணமே தரம் இல்லாத ஸ்டாஃப் தான். இவங்க ஒரு அளவுக்கு பேசிக் மட்டும்தான் கற்றுக்கொள்கிறார்கள் ஆனால் மற்றவர்களிடம் ரொம்ப கடினமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு பையன் அவனுடைய சப்ஜெக்ட் பற்றிய கேள்வியை கேட்டா அவன் உங்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறான் என்று கம்ப்ளைண்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்களே ? இந்த காதலுக்கு மரியாதை கொடுத்தா மட்டும் பத்தாதுப்பா !! கத்துக்கொடுத்த வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்கணும்னு சொல்வது போல நீங்கள் உங்களுக்கு பதில் தெரியாது என்று சொல்ல அவமானப்பட்டுக்கொண்டு பையன் விதிமுறைகளை மீறுகிறான் என்று அவன் மேல் கெட்ட பெயரை உருவாக்க நினைக்கின்றீர்கள் . இத்தனை பேச்சு பேசுற அட்மின் நீ படிச்சு இருக்கியா என்று என்னை கேட்டால் நானும் பட்டப்படிப்பு முடித்துதான் இந்த வியாபாரத்தில் வலைப்பூ போட்டு கடையை நடத்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி நான் படிக்கவில்லை என்றால் கடைநிலை ஊழியராக நான் நிறையவே கஷ்டப்பட்டு இருப்பேன் என்பதை இன்னைக்கும் என்னால் பரோமிஸ் பண்ணி சொல்ல முடியும் ! இங்க அடிப்படையில் பணக்கார வீட்டு பையனாக இருந்தால் "பார்த்தா தெரியல ? பெரிய இடத்து பசங்க ! " என்று சொல்லி கெத்து காட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் காலேஜ் போகாமல் இருக்கலாம், இதுதான் PRIVILAGED FAMILY இங்கே அடுத்த 3 தலைமுறைக்கு காசு பணம் இருக்கிறது அதனால் கவலை இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே என்னை பொறுத்தவரைக்கும் WWE போல SCRIPT பண்ணப்பட்ட வாய்த்தகராறு , அங்கே இருக்கும் ஒரு நடிகன் / நடிகை படிப்பு பெரிய விஷயம் இல்லை என்றால் அதை அப்படியே சப்போர்ட் பண்ணலாமா ? BIGG BOSS TAMIL இல் இருப்பவர்கள் எல்லாருமே பணக்காரர்கள் , இன்னும் சொல்லப்போனால் VIJAY TV யில் இருப்பவர்கள் எல்லாருமே பணக்காரர்கள். இவர்களிடம் 3 தலைமுறைக்கு சாப்பிட , தூங்க , துணிமணிகள் வாங்க காசு இருக்கிறது. இவர்களின் BANK PASSBOOK பார்க்காமல் உங்களுடைய வீட்டு கஷ்டத்தை எல்லாம் தாங்கி அப்பாவும் அம்மாவும் உங்களை படிக்க வைக்கிறார்கள் என்ற FACT ஐ மறந்து இவர்கள் சொல்வது போல படிப்பு அவசியமே இல்லை என்று நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். படிப்பு மட்டும் போதும் என்று இல்லை. வீட்டுக்குள் அடைபடாமல் ஒரு BIKE எடுத்துக்கொண்டு (குறிப்பாக LICENCE , RC BOOK , HELMET எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு ) வெளியே போய் பாருங்கள். படிப்பு இல்லை என்றால் மரியாதை இருக்காது . செத்த பசங்களா என்று வெறும் வாய் வசனம் பேசினாலோ , காமெடி , டான்ஸ் , கேம்பிளே வீடியோ , சாப்பாடு விமர்சனம் , சினிமா விமர்சனம் என்று எல்லாம் பண்ணி இணையத்தில் பணம் சம்பாத்தித்து விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். படிப்பு மட்டும் உங்களுக்கு இல்லைன்னா ஒரு கை இல்லாதவரை எப்படி நடத்துவாங்களோ அப்படி நடத்துவார்கள். உங்க மனசுக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உடைத்துவிடுவார்கள். இது எல்லாம் காசுக்கு நடிக்கற வியாபாரம் மக்களே !! நடிகர்கள் சொல்லும் கருத்தை கேட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி வாழ்க்கையை தொலைச்சுட்டு நீக்காதீங்க !! அப்பறம் ஒரு பய உங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் ! உங்களுக்கு கல்யாணம்'ஆன மாதிரிதான் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக