இந்த படத்தை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்று நினைப்பது ஒரு சில ஹிட் பாடல்கள் மற்றும் நல்ல கதை தொகுப்புதான். இந்த வாமனன் படம் கிறிஸ்டோபர் நோலனின் முதல் படமான ஃபாலோவிங் படத்துடைய நேரடியான ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் என்னை கேட்டால் ஒரு மொத்தமான இன்ஸ்பிரேஷன் என்றே சொல்லுவேன். ஜெய் , பிரியா ஆனந்த், ரகுமான் , சந்தானம் என்று பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஒரு சினிமா நடிகர் ஆகவேண்டும் என்று ஆசைப்படும் ஆனந்த் அவருக்கு தெரியாத ஒரு மணிதரான ஜான் விஜய்யுடன் சேர்ந்து வேலை பார்க்கும்போது ஒரு கொலை வழக்கில் மாட்டிககொள்கிறார் , நடந்த விஷயங்களின் பின்னணி என்ன ? சந்தானத்தின் உதவியுடன் ஜெய் எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருகிறார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் வெளிவந்த பொது ரெகுலர் ரொமான்டிக் காமெடியை விட கொஞ்சம் ஸ்பெஷல்லாக இருந்தது. இயக்குனர் ஐ. அகமத் ரெகுலர்ரான கமர்ஷியல் ஃபார்முலாக்களுடன் கிரீஸ்டோபர் நோலனின் சோர்ஸ் மேட்டீரியலை சேர்த்து ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார். இந்த படம் வெளிவந்து பல நாட்கள் ஆனாலும் "ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்" பாடலும் "ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது" பாடலும் இன்றும் ஸ்பாட்டிஃபை இசைப்பட்டியலில் இருப்பதை பார்க்கலாம். கிளைமாக்ஸ் நெருங்கும் வரை ஒரு டீசண்ட்டான ஸ்கிரீன் பிரசன்டேஷன் இந்த படத்தில் கொடுத்து இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக