𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 27 செப்டம்பர், 2023

CINEMA TALKS - ROWTHIRAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


"ரௌத்திரம் , இந்த படத்தை பொறுத்த வரைக்கும் நிறைய கமர்ஷியல் விஷயங்கள் கலந்து எடுக்கப்பட்ட ஒரு ஸீரியஸ்ஸான ஆக்ஷன் திரைப்படம் . ஜீவா , ஷ்ரேயா சரண் , சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது , இந்த படத்துடைய கதையை பார்க்கலாம் , காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மோசமான வில்லன்களின் நெட்வொர்க் சென்னையின் பல இடங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் நிலையில் தன்னுடைய சிறிய வயதில் இருந்தே தாத்தாவிடம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டதால்  யாராவது கொடியவர்களால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்போது நேருக்கு நேராக எதிர்த்து கேட்கிறார் கதாநாயகர் சிவா , ஆரம்ப கட்டத்தில் இருந்தே சிவாவை தோற்கடிக்க களம் இறங்கும் கொடியவர்கள் தங்களின் தலைவனாக இருக்கும் கௌரி எப்போது சிறையில் இருந்து வெளிவருவார் என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர் வெளியே வந்ததும் சிவா தான் தாக்குவது கௌரி என்று தெரியாமல் கடுமையாக தாக்கிவிடுகிறார். கோபக்கார வில்லனான கௌரி இப்போது சிவாவை பழிவாங்க எந்த எல்லைவரைக்கும் செல்வார் என்றபோது சிவா எப்படி இவர்களை சமாளித்து தன்னுடைய குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் திரைக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரையில் கதாநாயகன் சிவாவை சுற்றி நகர்வதால் கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரே நேரக்கோடாக செல்கிறது. கிளைமாக்ஸ் டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்தான் இருந்தாலும் படத்துக்கு பொருத்தமானதே ! ஒரு ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டாலும் ஷ்ரேயாவின் கலாய்க்கும் காட்சிகள் ரொமான்ஸ் கலந்த காமெடி , விஷுவல் என்று பார்க்கும்போது காமிரா வொர்க் நேர்த்தியாக இருந்தது. ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. கதை இன்னமும் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றினாலும் ஒரு பெரிய வில்லன் நெட்வொர்க்கை சினிமாவில் கொண்டுவருவதற்கும் இவர்களை தனி மனிதனாக எதிர்த்தால் என்ன நடக்கும் என்று காட்டுவதற்க்கும் படத்தின் இந்த ஸீரியஸ் டோன்தான் கைகொடுத்தது என்றால் மறுக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக