𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 13 செப்டம்பர், 2023

CINEMA TALKS - ORAM PO - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த படம் தியேட்டர் ரிலீஸ் ஆகும்போது என்னால் பார்க்க முடியவில்லை. அப்போதே ரேடியோக்களில் "இது என்ன மாயம்" என்ற பாடல் மிகவும் டிரெண்ட் ஃபேமஸ். நிறைய நாட்களுக்கு பின்னால் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்து. இந்த படம் ரிலீஸ் ஆன டைம்ல் நல்ல காம்பெட்டெஷன் ஆனால் படம் பாக்ஸ் ஆஃபிஸ்ஸில் நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தது. 

சென்னையின் பாஸ்ட்டான ஆட்டோ டிரைவர் சந்துருவின் ஆட்டோவில்  அண்ணாச்சி கடையில் இருந்து அனுப்பப்பட்ட பெரிய பண மதிப்புள்ள கருப்பு வைரங்கள் மாடிக்கொள்கின்றது. ஜோன் விஜய்யின் சன் ஆஃப் கன் குழுவினரை எப்படியாவது ஆட்டோ ரேஸ்க்களில் தோற்கடிக்க வேண்டும் என்று கடினமாக போராடும் பிகில் குழுவினர். இடையில் ஒரு ரொமான்டிக் அட்வென்சர் என்று படம் ஒரு சிறப்பான ஸ்க்ரீன் ப்ரெஸ்ஸென்டெஷன் கொடுக்க தவறவில்லை. 

புஷ்கர்-காயத்திரி இயக்குனர்கள் ஒரு படத்தினை திரைக்கதையாக எடுப்பதில் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்பதை அவர்களுடைய படங்களில் கண்டிப்பாக நிரூபணம் பண்ணுவார்கள் என்பதற்கு இந்த படம் ஃபர்ஸ்ட் எக்ஸாம்பிள். ஆட்டோ ரேஸ் காட்சிகள் பிரமாதம். லொகேஷன் தேர்ந்தெடுத்தல் படத்தின் கதையின் போக்குக்கு பொருத்தமாக உள்ளது. 

நடிப்பு என்ற வகையில் பார்த்தால் ஆர்யா , ஜான் விஜய் , லால் ஒரு பெஸ்ட் ஆன பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளனர். சப்போர்டிங் கேரக்டர்ஸ்க்கு நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் ஷாட்ஸ்க்கும் பிலிம் ரோல் ஷாட்ஸ்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதால்தான் இந்த படம் காமிரா வொர்க்கில் நல்ல எக்ஸிக்குயுஷன் என்று சொல்கிறேன். 

இந்த 2007 இல் இன்னோரு படமும் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் பெயர் யாருக்கு யாரோ ! இந்த படத்தை பற்றி மட்டும் நீங்கள் யுட்யூப் பண்ணி பாருங்களேன். பிலிம் மேக்கிங்கில் சாதனை படைப்பது எப்படி என்று ஒரு புத்தகமே எழுதிவிடும் அளவுக்கு இந்த படம் சொல்லிக்கொடுத்துவிடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக