"மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே ! வா வா என் வெளிச்ச பூவே வா.. உயிர் தீட்டும் உயிலே வா.. குளிர் நீக்கும் வெயிலே வா.. அழைத்தேன் வா அன்பே.. மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே.. காதல் காதல் ஒரு ஜூரம் காலம் யாவும் அது வரும் ஆதாம், ஏவாள் தொடங்கிய கதை.. தொடர் கதை.. அடங்கியதில்லையே.. " இந்த பாடல் இடம் பெற்ற படம் எதிர் நீச்சல். இந்த படம் வெளிவந்த 2013 களின் காலகட்டத்தில் தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. ஆனால் கவிஞர் வாலி அவர்கள் கொடுத்த பாடல் வரிகளில் இந்த பாட்டில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பாடல் வரிகள் மிகவும் கொஞ்சமாக இருக்கும். ஒரே ஒரு பாரகிராப் மட்டும்தான் பாடலின் நடுவரிகள் இருக்கும். ஆனால் முழுமையான பாடல் கேட்க முடியும் "ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைக்கூவே ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே, விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும் பூச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமை ஒரு இளமையில் தவிப்பது தகுமா" என்று மொத்தமாக 5 நிமிடம் மற்றும் 10 செகண்ட்ஸ்களில் இந்த பாடல் வரிகள் மற்றும் இசை என்னை கேட்டால் மிக்கவுமே ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். 2013 களில் எஃப் எம் அலைவரிசைகளில் இந்த பாடல் மிக அதிகமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. அனிருத் ரவிச்சந்தரின் ப்ரீமியமான இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் மோஹித் குரலில் இந்த பாடல் மறுமுறை கேட்க வைக்கும் ஒரு நல்ல பாடல் எனலாம். கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளை விட்டுக்கொடுக்க முடியாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக