தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளராக இருக்கும் டாக்டர் ரைன்டால் ஒரு விண்வெளி வால் நட்சத்திரம் பூமி மேல் மோதப்போகிறது என்பதை இவரது துறையில் பணிபுரியும் சிறப்பான விண்வெளி ஆராய்ச்சியாளர் கேட் உதவியுடன் கண்டறிகிறார், ஒரு வேலை அந்த வால் நட்சத்திரம் பூமி மேலே மோதினால் உலகமே அழிந்துவிடும். ஆனால் ஆரம்பத்தில் இந்த தகவலை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. அடுத்த எலக்ஷன்னில் எப்படி ஜெயிப்பது என்றும் இன்டர்வியூவுக்கு மேக்அப் போட்டுக்கொள்வதும்தான் தலைமை அரசியல் பண்ணுபவர்களின் விருப்பமாக இருப்பதால் நாள் கணக்கில் காக்க வைக்கப்படுகிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்பதால் மீடியா மூலமாக உயிரை பணயம் வைத்து உலகத்துக்கு இந்த விஷயத்தை சொல்லி சிறையில் அடைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று ரைன்டால் மற்றும் கேட் பண்ணும் முயற்சிகள் ஒரு அளவுக்கு வெற்றியை கொடுக்கவே கடைசியாக. கடைசி கடைசியாக உலகம் முழுவதும் எதிர்பார்த்து இருக்கும் ஒரு காப்பாற்றும் மிஷன் உருவாக்கி இந்த வால் நட்சத்திரத்தை உடைக்க ஏவுகணைகள் அனுப்பப்படுகிறது. அதனையும் சுயநலமும் பணத்தாசையும் பிடித்த ஒரு பிரைவேட் கம்பெனிக்காரன் வந்து கெடுத்துவிடுகிறான். ஒரு மாடர்ன் விமர்சனமாக உலகத்தின் போக்கையும் மக்களின் மன நிலையையும் தெளிவாக காட்டும் இந்த படம் வெளியான ஆண்டின் ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்றே சொல்லலாம். டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் அவர்களின் மிகச்சிறந்த நடிப்பு கொடுத்துள்ளனர். இந்த படம் உங்களை கண்டிப்பாக யோசிக்க வைக்கும், ஒரு தனியார் நிறுவனம் பண்ணும் காரியங்கள் மற்றும் மோசமான அரசியல் நிலைப்பாடு எப்படி மக்கள் தலையில் வந்து விடிகிறது என்று இந்த படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக புரியும் மொத்தத்தில் இந்த படம் ஒரு தரமான படைப்பு. கண்டிப்பாக பாருங்கள். இந்த படத்தை பற்றி கடைசியாக ஒரு விஷயம் சொல்லப்போனால் இந்த உலகம் அவ்வளவு முட்டாள்தனமாக நிஜ வாழ்க்கையிலும் சென்றுக்கொண்டு இருக்கிறது. மனிதர்கள் தலையில் மண்டைக்குள் சிப் வைத்து ஒரு ஆடு மாடு போல கட்டுப்படுத்த ஆராய்ச்சி போகிறது என்றால் அதனை கொஞ்சம் பேர் சப்போர்ட்டும் பண்ணுகிறார்கள். இங்கே சின்ன பசங்களுக்கு எல்லாம் சின்ன சின்ன விஷயங்களில் அட்வைஸ் பண்ணுகிறோம் ஆனால் இந்த உலகத்துக்கே அட்வைஸ் தேவை. இந்த மாதிரியே கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் மனித தன்மையை இழந்துவிட்டால் இந்த உலகம் எங்கேதான் போகும் ? நீங்க ஒரு மனுஷனை ஏழையாக மாற்றுவதோடு மட்டுமே இல்லாமல் அவனுடைய உயிரையும் உங்கள் உடமையாக கருதுவது கண்டிப்பாக மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல். நீங்கள் இந்த மாதிரி மனிதர்களை வைத்து ஆராய்ச்சி பண்ணக்கூடாது, இந்த பிளாக் சார்பாக நான் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உங்களை போல தனியார் நிறுவனத்துக்கு நம்பி பொறுப்பை கொடுத்தால் கண்டிப்பாக DONT LOOK UP படம் போல இந்த உலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் மறுவேலை என்று செயல்படுவீர்கள். இந்த பணக்காரர்கள் தொல்லையை முதலில் கட்டுப்படுத்தனும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக