ஸ்னோடேன் , இராணுவத்தில் பயிற்சியின்போது காயம்பட்ட காரணத்தால் புதிதாக என் எஸ் ஏ என்ற அரசாங்க பாதுகாப்பு துறையில் 2007 களில் வேலைக்கு சேரும் எட்வர்ட் ஸ்னோடேன் கணினி புரோகிராம்களை தயாரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார், பாதுகாப்பு காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள கணினி , செல்போன் , இ மெயில் , மெசேஜ் மற்றும் காமிரா தகவல்களை எடுக்கும் சிறப்பு ப்ரோக்ராம்களை ஸ்னோடேன் உருவாக்குகிறார் மேலும் அந்த புரோகிராம்களை பாதுகாப்பு அமைப்புகளுக்கு கொடுக்கிறார், ஒரு கட்டத்தில் 2013 களில் சில மோசமான அதிகாரிகளால் இந்த புரோகிராம் அப்பாவி மக்களை எல்லாம் சந்தேகப்பட்டு கைது செய்வதில் இருந்து தேர்தல் அரசியல் வெற்றிகளை உருவாக்குதல் வரை எல்லா கெட்ட காரியங்களுக்கும் ஸ்னோடேன் தயாரிப்புகள் காரணமானதை கண்டுபிடிக்கிறார். இப்போது அவர் நடக்கப்போகும் ஆபத்தை என்ன செய்தார் ? இவருடைய முயற்சியால் இவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன என்பதை தெளிவாக சொல்லியுள்ளது. என்பதுதான் இந்த கதை, இது உண்மையாகவே நடந்த ஒரு விஷயம் என்பதால் மனதுக்கு கடினமாக உள்ளது. எட்வர்ட் ஸ்னோடேன் ஒரு உண்மையான வாழ்க்கை ஹீரோ, இந்த பட குழுவினர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். டிஜிட்டல் ப்ரைவசி என்பது எவ்வளவு அவசியமானது என்பதை இந்த படம் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம். இந்த மாதிரியான படங்கள்தான் நம்முடைய உலகத்துக்கு தேவை. இது போன்ற படங்கள்தான் சினிமா இந்த உலகத்துக்கு எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை உணர்த்தும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக