கடந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இந்த கதை தொடங்குகிறது, இளவரசர் பொன்னியின் செல்வனை கொல்ல போட்ட திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதால் புதிதாக அரசராக ஆசைப்படும் மதுராந்தாகரால் நாட்டில் நிலவும் குழப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு மிக சரியான திட்டம் பகைவரால் போடப்படுகிறது, ஆதித்ய கரிகாலன் எதனால் நந்தினியின் காதலை பிரிய நேர்ந்தது என்பது முதல் இந்த சதிதிட்டங்கள் முறியடிக்கப்பட்டதா என்பது வரையில் சென்ற படத்துக்கு ஒரு பெர்பெக்ட் தொடர் பாகமாக இந்த படம் அமைந்துள்ளது. காட்சிகள் மற்றும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. புத்தக கதையில் செய்யப்பட்ட மாற்றம் அவசியமானதுதான். காரணம் என்னவென்றால் ஆதித்தன் - நந்தினி போன்று ஒரு அபூர்வமான எமோஷனல்லான உண்மையான ஒரு காதல் கதையின் உயிரோட்டத்தில் மட்டமான மாற்றங்களை கொடுக்காமல் இருப்பது பற்றி யோசித்ததால்தான் இந்த டுவிஸ்ட்டை கொடுத்து நந்தினியை நிஜமாகவே காதலித்தாலும் இந்த காதல் கடைசிவரைக்கும் போராடி தோற்றுதான் போனது என்று கிளைமாக்ஸ் வரைக்கும் காட்டி இந்த கதையை ஒரு படமாக பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கதையாக ரசிக்கும்படியாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். பொழுது போக்கு அம்சங்களுக்காக ஒரு பெரிய கௌரவமான சோழ வரலாற்றின் கதையமைப்பை மாற்றாமல் இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் 2 படத்துடைய கிளைமாக்ஸ் ஒரு நியர் பெர்பெக்ட் கிளைமாக்ஸ் என்றே சொல்லலாம். பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் பெஸ்ட்டா அல்லது முந்தைய படம் பெஸ்ட்டா என்று கேட்டால் இந்த இரண்டு படங்களும் சரிசமமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குறையாக பார்த்தால் இந்த படம் நான் பார்க்கும்பொது முதல் படத்தில் இருப்பது போல நிறுத்தி நிதானமாக காட்சிகளை நகரத்த போதுமான அட்வாண்டேஜ் இந்த படத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. DIRECTORS CUT இருந்தால் கண்டிப்பாக 8 மணி நேரத்துக்கு மேல் கூட இருந்து இருக்கலாம். நிறைய காட்சிகளை 3 மணி நேரத்துக்குள் நெருக்கமாக அமைத்து இருப்பார்கள். அதனால்தான் என்னமோ இந்த படத்தில் முதல் படம் போல ஒரு நிறைவான காட்சி அமைப்பு இல்லை. ஒரு சில காட்சிகள் விட்டுபோனது போல இருக்கிறது ஆனால் கதை நன்றாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக