𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - ZACK SNYDER'S JUSTICE LEAGUE - [REGULATION 2024 - 00071]


இயக்குனர் ஜாக் ஸ்னைடர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் - இந்த திரைப்படத்தை பற்றி நிச்சயமாக சொல்லியே ஆக வேண்டும். இந்த படம் 2017 ல் வெளிவந்து அவ்வளவு வணிக அளவிலான வெற்றியை அடையாத ஜோஸ் வேடன் இயக்கத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் (2017) திரைப்படத்தின் மறுபதிப்பு எனலாம். அந்த திரைப்படம் இயக்குனர் ஜோஸ் வேடன் இயக்கத்தில் ஜாக் ஸ்னைடர் கதையில் நிறைய மாற்றங்களை செய்து வெளிவந்ததால் வெற்றியை அடையவில்லை.. ஆனால் இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக வெற்றி அடைய ஒரே கரணம்தான், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் RUNNING LENGTH இருந்தாலும் இந்த திரைப்படம் "ஒரு சிறந்த திரைப்படம்" - டி சி காமிக்ஸ் கதாபாத்திரங்களான பேட் மேன் , சூப்பர் மேன் , ஃபிளாஷ் , அகுவா மேன், வோண்டர் வோமன் மற்றும் சைபார்க் இணைந்து ஜஸ்டிஸ் லீக் என்னும் சூப்பர் ஹீரோ குழுவை உருவாக்கி இந்த பூமிக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து இந்த பூமியை காப்பாற்ற போராடுவதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் நடிப்பு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இடங்கள் என எல்லாமே சிறப்பானதாக உள்ளது. உண்மையில் இந்த 2021 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் "மிகச்சிறந்த திரைப்படம்" என்ற விருதை ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்துக்கு கொடுக்கலாம். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் , ஃபிளாஷ் காலத்தை கடந்து செல்லும் காட்சிகள், சைபோர்க் பணம் கொடுத்து உதவும் காட்சி, ஸ்டேப்பேன் உல்ஃப்க்கு எதிராக சண்டையிடும் காட்சி, என்று எல்லா காட்சிகளும் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. விஷுவல் எஃபக்ட்ஸ் அவுட் டேட்டட் ஆக தோன்றலாம் ஆனால் துல்லியமாக இருந்தது. இந்த திரைப்படத்தை கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறை பார்க்கலாம். இந்த திரைப்படம் 2021 ம் ஆண்டு வெளிவந்தது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக