அவென்ஜர்ஸ் இன்பினிட்டிவார் 2018 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த 19 வது திரைப்படம் ஆகும். முந்தைய மார்வெல் திரைப்பட வரிசையில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிசக்திவாய்ந்த இன்பினிட்டி ஸ்டோன்கள் எனப்படும் சக்திவாய்ந்த கற்களின் சக்தியை பயன்படுத்தி தேனொஸ் இந்த பிரபஞ்சத்தை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார் . இதனால் டாக்டர் ஸ்ட்ரெய்ன்ச், கார்டியன்ஸ் OF THE காலக்சி, பிளாக் பந்தர் ஆகியோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு தேனொஸ் இன் இந்த மோசமான முயற்சியை தடுத்து எல்லோரையம் காப்பாற்ற போராடுகின்றனர், இந்த முயற்சி வெற்றி அடையுமா ? அவெஞ்சர்ஸால் எல்லோரையும் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக சிறப்பானதாகும். இந்த திரைப்படத்தின் அசத்தலான ஆக்சன் காட்சிகள், வலிமையான திரைக்கதை மற்றும் அருமையான விசுவல் எபக்ட்ஸ் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் வேகமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு சூப்பர்ஹெரொ திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அட்வெஞ்சரான திரைப்படமாக மாற்றியுள்ளது. கேப்டன் மார்வெல் மற்றும் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் என்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அவெஞ்சர்ஸ் ENDGAME என்ற திரைப்படம் 2019 ல் வெளிவந்தது . இந்த 2 படங்களை BACK 2 BACK பாருங்கள் , நன்றாக இருக்கும் . என்னுடைய RECOMMENDATION. இந்த படம் அப்படியே கண்ணுக்குள் நிற்கும் படம். உலக திரைப்பட வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக