விக்டர் நெவெர்ஸ்கி அவருடைய க்ரெகேசியா என்ற நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிகள் விமானத்தில் வருகிறார், இப்போது நியூ யார்க் நகரத்தின் ஏர்போர்ட்டில் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அவருடைய பாஸ்போர்ட் மற்றும் பயணசீட்டு கட்டாயப்படுத்தி வாங்கிக்கொள்ளப்படுகிறது. மேலும் அமெரிக்காவுக்கு நாட்டின் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவரிடம் இருந்த குறைவான பணம் மற்றும் LUGGAGE உடன் இப்போது நின்றுகொண்டு இருக்கும் விமான நிலையத்திலேயே தங்கவேண்டிய சிரமமான நிலை உருவாகிறது. நெவெர்ஸ்கி வேறு வழியில்லாமல் அவருக்கு தெரியாத ஆங்கில மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு அங்கேயே கிடைக்கும் சிறிய வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி போதுமான பணம் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டு அங்கே வேலை செய்யும் பணியாளர்களுடைய உதவியுடன் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முயற்சிக்கிறார். இப்போது இப்படி ஒரு இக்கட்டான சூழநிலையில் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படம் 2004 ம் ஆண்டு வெளிவந்தது . இந்த உலகத்தில் இப்போது எல்லாம் மனிதன்மை ரொம்பவே குறைந்துதான் காணப்படுகிறது. காடுன்னா நான் சிங்கம் , காத்துன்னா நான் சூறாவளி என்று ஒருவரை ஒருவர் பயமுறுத்தி அடிமையாக வாழவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆனால் சகமனிதனுக்கு உதவி பண்ண வேண்டும் என்ற அடிப்படையான மனசு கூட இப்போது எல்லாம் வருவது இல்லை. இந்த படத்தில் ஏர்போர்ட்ல் சிறை வைக்கப்பட்டு உள்ள நெவராஸ்கி கதாப்பத்திரமும் அப்படித்தான். நம்ம காலத்தில் அடிப்படையான மனிததன்மையே இல்லாமல் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மனிதர் என்றால் அவரை காயப்படுத்ததான் முயற்சி பண்ணுகிறோம். நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நீ சினிமா விமர்சனம் பண்ணற எதுக்காக கருத்து சொல்கிறாய் என்று கேட்கலாம் ஆனால் பிறப்புனால உயர்வு / தாழ்வு பார்க்கும் மட்டமான ஜனங்கள் இருக்கின்றார்கள். ஒரு 5 வயது குழந்தையை கூட நீ இன்ன சாதி இன்ன இனம் அதனால முன்னேறவே கூடாதுன்னு மனசாட்சி இல்லாமல் சொல்லும் ஊரு பெரிய மனுஷங்கள் இருக்காதான் செய்கிறார்கள் இந்த மாதிரி பிரிவினை கொண்டாடுபவர்களுக்கு எல்லாம் இந்த படம்தான் முக்கியமான படம் கண்டிப்பாக பாருங்கள் ! இந்த படத்தை எடுத்தவருக்கு கோயில்லே கட்டலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக