𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 4 ஜூலை, 2020

CINEMATIC WORLD - 028 - BUMBLEBEE (2018) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00047]



 


ஆட்டோபாட்ஸ் டிசெப்டிகான்ஸ் க்கு எதிரான போராட்டத்தில் அவர்களுடைய ஸைபர்ட்ரான் கிரகத்தில் இருந்தது பூமிக்கு செல்ல முயற்சி செய்கிறார்கள் - 1987 ல் பூமிக்கு அனுப்பப்படும் ஆட்டோபாட்ஸ் குழுவை சார்ந்த B-127 BUMBLEBEE பூமிக்கு வருகிறார். ஆனால் பூமியில் இருந்த ஒரு டிசெப்டிகானின் தாக்குதலால் கடந்த கால நினைவுகளையும் பேசும் திறனையும் இழக்கிறார். இந்த நிலையில் டிசெப்டிகான்ஸ் பூமியை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். BUMBLEBEE அவருக்கு பூமியில் கிடைத்த நண்பர்களான சார்லீ வாட்சன் மற்றும் கில்லரினோ மீமொ கிடாரிஸ் இன் உதவியுடன் எல்லோரையும் காப்பாற்ற முயற்சி செய்வதுதான் இந்த திரைப்படத்தின் கதை. TRANSFORMERS திரைப்படத்தின் வரிசையில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு கலகலப்பான சுவாரஸ்யமான திரைப்படமாக உள்ளது. இந்த திரைப்படம் 80ஸ் காலகட்டத்தின் நினைவுகள் மற்றும் சிறப்பான கதையமைப்பால் நிறைய பாராட்டுக்கள் மற்றும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் - TRANSFORMERS - RISE OF THE BEASTS என்ற திரைப்படம் 2022 ல் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து : இந்த படத்தில் நிறைய ஃபேமிலி வேல்யூஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஷிப் வேல்யூக்கள் இருக்கிறது. 80 ஸ் களின் RETROTECH காலகட்டம் அமெரிக்காவின் GLOBAL முன்னேற்றத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டம் அமெரிக்க CAR களின் வரலாற்றில் பெஸ்ட்டாக இருந்த இன்னொரு DECADE - இந்த காலகட்டத்தின் நினைவுகளை படத்தில் நன்றாக கொடுத்து படத்தை சூப்பர்ராக கொடுத்த காரணத்தால் படம் நன்றாகத்தான் இருக்கிறது. TRANSFORMERS 4 மற்றும் 5 ஐ இந்த MULTIVERSE ல் இருந்து எடுத்துவிட்டு இந்த படத்தின் கதையை தொடர்ந்தது REBOOT பண்ணினால் கூட படம் நன்றாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்து இந்த படம் ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டேன்மென்ட். ஒரு சூப்பர்ரான மறுபதிப்பு !!











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக