𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 28 ஜூன், 2020

CINEMATIC WORLD - 026 - ANT MAN (2015) - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00045]



இந்த திரைப்படம் 2015 ல் வெளிவந்தது , சிறையில் இருந்து வெளியே வரும் ஸ்காட் லாங் இனிமேல் கொள்ளையடிக்க போவதில்லை என்று முடிவு செய்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஹாங்க் பிம் என்பவருக்கு சொந்தமான சிறப்பு தொழில் நுட்பத்தால் உருவான ANT MAN - SUIT ஐ எடுக்கிறார். ஆனால் அவருடைய திறன்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹாங்க் பிம் ன் தொழில்நுட்ப அறிவியலின் உதவியுடன் ஒரு மிகப்பெரிய நிறுவன அதிபராக இருக்கும் டேரனிடம் இருந்து இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது, ANT MAN இந்த உலகத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே இந்த திரைப்படத்தின் கதைக்களம், இந்த திரைப்படத்தின் அடுத்தபாகம் ANT MAN & THE WASP  2019 ல் வெளிவந்தது. இந்த படம் பார்க்கும்போது எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் மின்னணு பொறியியல் படிச்சாலும் வெளிநாட்டில் கூட வேலை கிடைக்காமல் போகும் என்று இந்த படம் கொடுக்கும் லாஜீக்தான். இந்த உலகமே ஒரு CORRUPTION ல் இருக்கிறது. இங்கே FIR ஃபைல் பண்ணினால் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் BACKGROUND ஆக வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாகவும் இருக்க அவரால் முடிந்த அனைத்து விஷயங்களையும் பண்ணி உயிரை கொடுத்து RISK எடுப்பதால்தான் ANT MAN சிறப்பானவர். இந்த படத்துடைய HERO வாக இருக்கும் PAUL RUDD அவருடைய கதாப்பாத்திரத்துக்கு நல்ல மரியாதையை கொடுத்துள்ளார். இவருடைய கதாப்பாத்திரத்துக்கு இப்போது இவரை விட பெஸ்ட் சாய்ஸ் யாருமே இல்லை என்ற அளவுக்கு ஒரு அமேஸிங் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து இருக்கிறார். நண்பர்களோடு கொள்ளையடிப்பதில் இருந்து விவகாரத்தால் பிரிந்த பின்னாலும்  சொந்த மகளிடம் நிறைய பாசம் காட்டும் அப்பாவாகவும் அதே சமயம் இந்த ANT MAN டெக்னாலஜியை கற்றுக்கொண்டு உயிரை பணயம் வைத்து கிளைமாக்ஸ்ஸில் சண்டையிடும் காட்சிகளாக இருந்தாலும் ஒரு கதையை விஷுவல்லாக எவ்வளவு தெளிவாக ப்ரெசெண்ட் பண்ண முடியுமோ அவ்வளவு தெளிவான முறையில் இந்த படத்தில் ப்ரெசெண்ட் பண்ணி இருப்பார்கள். LUIS கதாப்பாத்திரம் கிளைமாக்ஸ்ல நல்ல ஒரு கெஸ்ட் APPEARANCE கொடுத்து CIVIL WAR படத்துக்கு ஒரு LEAD கொடுத்து உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக