𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

புதன், 10 அக்டோபர், 2018

CINIMATIC WORLD - 011 - SING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - உங்களில் யார் அடுத்த சூப்பர் சிங்கர் !! - [REGULATION-2024-00027]




இந்த திரைப்படம் 2016 ல் வெளிவந்தது ..இந்த திரைப்படம் Music பிடித்தவர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் .. இந்த திரைப்படமும் ஒரு அருமையான அனிமேஷன் திரைப்படம்தான் .இப்போது இந்த திரைப்படத்தின் கதை .. " நஷ்டத்தில் இருந்தாலும் அவருடைய இசை அரங்கத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் KOALA அவருடைய இசை நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்கிறார் .. இருந்தாலும் ஒரு தவறுதலால் இசை நிகழிச்சியின் பரிசு தொகை ஆயிரம் டாலர்கள் என்பதற்கு பதிலாக லட்சம் டாலர்கள் என பதியப்பட்டுவிட்டது . இந்த உண்மை தெரியாமலே உரிமையாளர் KOALA இசை நிகழ்ச்சியை நடத்த நினைக்கிறார் .. இன்னும் நிறைய கனவுகளுடன் பங்குபெறும் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் இந்த உண்மை தெரியவருகிறது .. இனிமேல் என்ன நடக்கும் என்பதுதான் SING திரைப்படத்தின் கதை .. ZOOTOPIA திரைப்படத்தில் இருப்பது போலவே இந்த திரைப்படத்திலும் Animals அனிமேஷன் கதாபாத்திரங்கள் அருமை .. மாயாஜாலங்களும், அறிவியல் விஷயங்களும் இல்லாமல் எதார்த்தமான திரைக்கதையும் இந்த திரைப்படத்தின் தனித்தன்மையாக . இந்த திரைப்படம் நிச்சயமாக எல்லோரும் பார்க்கலாம் . இல்லூமினேஷனின் மற்ற படங்கள் போல இந்த படம் இல்லை. இது ஒரு முழுக்க முழுக்க மியூசிக்கல் ஜெனர்க்கு அர்ப்பணிப்பு பண்ணப்பட்ட படம். கிளைமாக்ஸ்ல உங்களுக்கு அது புரியும். இந்த TROLLS படம் போல மியூசிக்தான் இந்த படத்தின் கதையின் ஆணிவேர். நம்ம ஊரு முகவரி படம் போல மியூசிக் மற்றும் பாடல் துறையில் சாதிக்க முனைவோருக்கு இந்த படம் இண்டரெஸ்ட்டிங்காக இருக்கலாம் மற்றபடி பொதுவாக ஆடியன்ஸ் பார்த்தாலும் கதை நன்றாகத்தான் இருக்கும். மொக்கை போட்டு இருக்க மாட்டார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக