𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

சனி, 29 செப்டம்பர், 2018

CINIMATIC WORLD - 009 - UP - DISNEY ANIMATED FILM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00025]




பார்க்க வேண்டிய அருமையான திரைப்படங்களின் பட்டியலில் இந்த திரைப்படத்தை நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். தன்னுடைய மனைவி காலாமான பின்னால் அவருடைய நினைப்பில் வாழ்ந்துகொண்டு இருக்கும்  CARL ஐ அவருடைய வீட்டை இடிக்க வேண்டும் என்று சொல்லி நிறைய பேர் பிரச்சனையாக பண்ணிக்கொண்டு இருப்பதால் ஒரு கட்டத்தில் அவருடைய மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது வீட்டின் கூரை முழுவதும் ஹீலியம் பலூன்களை பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க வைக்கிறார்.. (நிஜமாத்தான்)  ஆனால் கதை இங்கே முடியவில்லை. 


ஒரு தனி தீவை கண்டுபிடித்து தனியாக இருந்தால் யாருமே எதுவுமே பண்ண மாட்டார்கள் என்று முடிவெடுத்து பறந்து செல்லும் வீட்டில் பயணம் பண்ணிக்கொண்டு இருக்கிறார் நம்முடைய அன்பான கணவர் CARL . இருந்தாலும் அவரே எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என்னவென்றால்  இந்த பயணத்தில் RUSSEL என்ற பள்ளிக்கூடம் போகும் சின்ன பையனும் இணைந்துவிட்டான். தென் அமெரிக்கா காடுகளில் வாழவேண்டும் என்று முடிவு பண்ணி செல்லும் இந்த பயணத்தில் எங்கேயோ இருந்து வந்த ஒரு அதிசயமான மிக மிக உயரமான பறவையை கண்டுபிடிக்கிறார்கள். !!

அந்த பறவைக்கு KEVIN என்று பெயர் வைக்கிறார்கள். இங்கே நிறைய நாட்கள் அந்த பறவையை கொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டுப்பகுதியில் அலைந்துகொண்டு இருக்கும்  CHARLES என்ற ADVENTURE HUNTER அந்த பறவையை வேட்டையாட நினைப்பதை அறிந்து அவரிடமிருந்து அந்த பறவையை காப்பாற்ற RUSSEL மற்றும் CARL எடுக்கும் முயற்சிகள்தான் இந்த படத்தின் கதை... இந்த அனிமேஷன் திரைப்படம் 2009 ம் ஆண்டு வெளிவந்தது. உங்களுக்கு LOGIC - கை தூரமாக போட்டுவிட்டு MAGIC காக ஒரு படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் இந்த படம் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கலாம். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக