𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

CINEMATIC WORLD - 004 - RISE OF THE GAURDIANS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! ❤❤❤ [REGULATION-2024-00008]





"பனியை கட்டுப்படுத்தும் சக்தியுள்ள மாயாஜால கதாநாயகன்தான் நம்ம  ஜேக் ஃப்ராஸ்ட் . இவருக்கு அம்னீசியா இருந்து  பாதிக்கப்பட்டுள்ள மனிதனாக இருப்பதால்  கடந்தகாலத்தின் நினைவுகள் என்று எதுவுமே இல்லாமல்  மேலும் யாருடைய கண்களுக்கும் தெரியாமலும் இருக்கும் சூப்பர் ஹீரோவாக இருக்கிறார். இப்படி குட்டி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கொண்டே அவரது கடந்தகாலத்தின் நினைவுகளையும் தேடும் ஜேக் ஃப்ராஸ்ட்க்கு சொந்தம் என்று யாருமே இல்லை என்ற கவலை இருக்கிறது,  இன்னொரு பக்கம் இந்த கிறிஸ்துமஸ் நேரத்தை பயன்படுத்தி பயமுறுத்தி சக்திகளை அதிகப்படுத்தும் பிட்ச் பிளாக் என்ற கருப்பு நிற இருள்  வில்லனின் உலகத்தை அழிக்கும்  திட்டத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற நம்ம  ஸான்டா க்லாஸ் , ஈஸ்ட்டர் பென்னி , டூத் பியாரி இன்னும் சொல்லப்போனால் அவருடைய கிப்ட்களை கொடுக்கும் மொத்த அமைப்புக்குமே  ஜேக் ஃப்ராஸ்ட்ன் உதவி தேவைப்படுவதால் இந்த கூட்டணி இணைந்து பயத்தின் அரசன் பிட்ச் பிளாக் பண்ணும் சதித்திட்டங்களை  முறியடிக்க பண்ணும் போராட்டங்கள்தான் இந்த படத்தின் கதைக்களம். கிளைமாக்ஸ்ல இவர்கள் பண்ணும் பாதுகாப்பு முயற்சிகள் வெற்றிபெற்றதா கடந்த கால நினைவுகள் திரும்ப கிடைத்ததா என்பது நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.ஒரு நல்ல WEEKEND படம் ஃபேமிலியுடன் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த படம் உங்களுக்கு நல்ல சாய்ஸ் . இந்த திரைப்படத்தின் கதை ஒரு நல்ல கிறிஸ்துமஸ் ஃபேண்டஸி படமாக இந்த படத்தை கொடுத்துள்ளது.. இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த ஆண்டு பெரிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இல்லை என்றாலும் நம்ம சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நல்ல படம் இந்த படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் நல்லா இருக்கும் !!

]

2 கருத்துகள்:

  1. இது நிறைய பேரு பார்த்திருக்க வேண்டிய கிறிஸ்துமஸ் திரைப்படம்

    பதிலளிநீக்கு
  2. இருந்தாலுமே ஒரு மனுஷன் நாத்திகனா இருக்கிறது தான் நல்லது அளவுக்கு அதிகமான கடவுள் நம்பிக்கை வைத்திருக்கிறது. கடைசியில் அவனுக்கே பிரச்சினைலதான் போய் முடியுது.

    பதிலளிநீக்கு