𝙏𝙖𝙠𝙚 𝘾𝙖𝙧𝙚 ! 𝙎𝙩𝙖𝙮 𝙏𝙪𝙣𝙚𝙙 !

திங்கள், 11 நவம்பர், 2024

CINEMA TALKS - TAMIL MOVIE "RHYTHM" - ORU DEEP ANALYSIS ! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் பாக்ஸ் ஆபீஸ்ஸில் களைகட்டும் என்று ஒரு காலம் இருந்தபோது  செப்டம்பர் 15, 2000 தேதியன்று இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டது. அர்ஜூன் மற்றும் மீனா நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் வேற லெவல்லில் ஒரு கம்பொஸிஷன் கொடுத்து சினிமாவின் தரத்தை சிறப்பாக உயர்த்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது போல ஒரு மியூசிக் ஸ்கோர் கொடுத்து இருப்பார் !

நதியே நதியே காதல் நதியே - நீர் !
காற்றே என் வாசல் வந்தாய் - காற்று !
நிலமே பொறு நிலமே - நிலம் !
கல கலவென பொழியும் பொழியும் மேகம் - ஆகாயம் ! 
ஐயோ பத்திக்கிச்சு ஹோ பெண்ணே ! - நெருப்பு !

என்று நேச்சுரல் எலிமேன்ட்ஸ்க்கு பாடல் வரிகளில் க்ரேடிட்ஸ் கொடுக்க ஒளிப்பதிவாளர் வினோத் காட்சிகளை தெளிவாக எடுத்து படத்தை தரமாக காட்டி இருப்பார் 

போட்டோ-எடிட்டராக பணிபுரியும் கார்த்திகேயனும் ஒரு வங்கி அஸிஸ்டன்ட்டாக பணிபுரியும் சித்ராவும் ஒரு கட்டத்தில் சந்தித்து தமது கடந்தகால வாழ்க்கையில் நேசித்த வாழ்க்கை துணையை மரணத்தால் இழந்ததால் இன்னொரு புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும்பொது அந்த காதலும் அதனால் உண்டாகும் வலிகளும் ரொமான்ஸ்களும் என்று ஒரு ஹாலிவுட் படம் லெவல்க்கு திரைக்கதை கொடுத்தால் தரமான விமர்சனங்கள் மற்றும் காட்சி அமைப்புக்காக பாராட்டப்பட்ட இந்த படம் வெளியான போது விமர்சகர்களிடமிருந்து நேர்மையான கருத்துக்களை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாய் உள்ளது. மேலும் சிறப்பான இசையும் சரியான கதைப்பதிப்பும் இன்று வரை ஆவலோடு பாராட்டப்படுகின்றன.



1 கருத்து:

  1. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படமே ஒரு வித தியான நிலையில் தான் இருக்கும் அதை விட இந்த அழகான கிளைமாக்ஸ். நல்லா நினைவு இருக்கு தியேட்டர்ல நாங்க ரிதம் பார்த்தப்ப பெருசா ஒன்னும் கூட்டம் இல்லை. ஆனா கிளைமாக்ஸ்-ல ட்ரெயின் போன அப்பறம் ரஹ்மான் தீம் தனனா வாசிக்கிறப அர்ஜுன் பொட்டி படுக்கையை தூக்கிட்டு வரப்ப படம் பார்த்த அத்தனை பேரிடம் இருந்தும் கை தட்டல்கள் அப்போ ஆரம்பிச்சப்ப கை தட்டல்கள் படம் முடிஞ்சு வெளில வர வரைக்கும் கேட்டுகிட்டு இருந்துச்சு இப்போ நினைக்கும்போது கூட கேக்குதுன்னா பத்துகோங்களேன் ❤

    பதிலளிநீக்கு